மின் கட்டண உயர்வு சட்டவிரோதமானது என்றும், தாம் மீண்டும் இலங்கை திரும்பியதும் அதற்கு எதிராக போராடுவேன் என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்.
அவுஸ்திரேலியாவில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.தொடர்ந்து கூறுகையில்,
சட்டத்திற்கு புறம்பான முடிவுகளை எடுத்த அனைவரும் அதன் விளைவை அனுபவிக்க நேரிடும் என்று கூறிய அவர், இந்த முடிவை திரும்ப பெற முடியும் என்றார்.
2024 ஆகஸ்ட் வரை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் தான் இருப்பதாகவும், தன்னை அப்பதவியிலிருந்து நீக்க சிறப்பு நடைமுறை உள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும், தாம் போராட்டத்தை கைவிடவில்லை என்றும், அரசியல் சாசனத்திற்கு முரணான முடிவுகளை எடுத்தவர்களுக்காக தற்போது உண்மையான போராட்டம் தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, இவ்வாறான வேலையை செய்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று உறுதியாக நம்புவதாகவும் அவர் கூறினார்.