
ஹோமாகம, பிட்டிபனவில் அமைந்துள்ள பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை கல்வி நடவடிக்கைகளுக்காக முதலாம் வருட மாணவர்களுக்காக இம் மாதம் 27ஆம் திகதி மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் உப வேந்தர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அங்கு இடம்பெற்ற பகிடிவதை சம்பவத்தையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதியுடன் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.