பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டண திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மின்சக்தி அமைச்சர் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, மின்சார பாவனையாளர்களுக்கு தொடர்ச்சியான மின்சாரம் வழங்குவதுடன், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குதல், மத ஸ்தலங்கள் மற்றும் அரச கல்வி நிறுவனங்களுக்கு சூரிய மின் தகடுகளை வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
நேற்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இலங்கை மின்சார சபையின் (CEB) கட்டண திருத்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது, இது 05 ஜனவரி 2023 அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.