
இலங்கையில் 1,122,418 பெண்கள் சாரதி அனுமதிப் பத்திரங்களை பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் மொத்தமாக 12,700,000 பேர் சாரதி அனுமதிப் பத்திரங்களை வைத்துள்ளனர்.
குறித்த எண்ணிக்கையில் 2082 பெண்கள் கனரக வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் வசந்த ஆரியரத்ன தெரிவித்தார்.
2010 ஆம் ஆண்டு 23,488 பெண்களுக்கு மாத்திரமே சாரதி அனுமதி பத்திரம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.