இந்தியாவின் கடன் தள்ளுபடியின் கீழ் பெறப்பட்ட மீதமுள்ள தொகையை அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிற்கும், இந்திய நிதி மற்றும் கூட்டுத்தாபன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கைக்கு வழங்கப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனின் கீழ் எஞ்சிய தொகையை மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு பயன்படுத்த இந்தியா எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
மிலிந்த் மொரகொடவுக்கும் நிர்மலா சீதாராமனுக்கும் இடையிலான சந்திப்பு புதுடெல்லியில் உள்ள நாட்டின் நிதியமைச்சில் இடம்பெற்றதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியைப் பெறுவதற்கு அவசியமான நாட்டின் கடன் மறுசீரமைப்பின் தற்போதைய நிலைமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, அத்தியாவசிய மருந்துகளை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டுமென அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சிதத் சுரங்க தெரிவித்துள்ளார்.