
பெரும்போகத்தில் விளைச்சல் செய்யப்பட்ட நெல் இன்று(15) முதல் கொள்வனவு செயப்படவுள்ளதாக என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான ஒதுக்கீடுகள் மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.’
இதன்படி, அதிகபட்ச ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச தானியம் உள்ளடக்கம் கொண்ட முறையான தரத்தில் ஒரு கிலோகிராம் நெல் அரிசி 100 ரூபாய்க்கு கொள்வனவு செயப்படவுள்ளது.
14 வீதத்திற்கும் அதிகமான ஈரப்பதம் கொண்ட நாடு நெல் ஒரு கிலோவுக்கு 88 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படும் என விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.