சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் நிதியுதவியின் நீண்ட காலத் தீர்மானம், கடன் நிவாரணம் தொடர்பாக இருதரப்பு கடன் வழங்குநர்கள் வழங்கிய ஒப்பந்தங்களைப் பொறுத்தே அமையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நீட்டிக்கப்பட்ட நிதி வசதி குறித்த பணியாளர் ஒப்பந்தம், கடனாளிகளிடமிருந்து தொடர்புடைய ஒப்பந்தங்கள் பெறப்பட்டவுடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று நிதியம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் இலங்கைக்கு அத்தியாவசியமான வெளிநாட்டு நிதி வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.