புதிய வரிக் கொள்கைக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று (08) காலை ஆரம்பிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டம் இன்று (09) காலை 8.00 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
விசேட வைத்தியர்கள், அரச பல் வைத்திய அதிகாரிகள் மற்றும் அரச பதிவு மற்றும் உதவி வைத்தியர்கள் உட்பட அனைத்து வைத்தியர்களும் நேற்று இந்த தொழிற் சங்க போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.
இதனால், பல அரச மருத்துவமனைகளில் நோயாளர் பாதிக்கப்பட்டனர்.
எதிர்வரும் சில தினங்களில் அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிடின் அடுத்த நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்படும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் தமது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் எதிர்வரும் 17ம் திகதிக்கு பின்னர் கடுமையான தொழில்சார் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக துறைமுக சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் தலைவர் திரு.பிரசன்ன களுதரகே தெரிவித்துள்ளார்.