அரசாங்கத்தின் தற்போதைய வரிக்கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல தொழிற்சங்கங்கள் இன்று பாரிய தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளன.
நியாயமற்ற வரிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தப்படவுள்ளது.
மருத்துவம், மின்சாரம், துறைமுகம், பெட்ரோலியம், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்றைய போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இதற்கமைய, அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளின் சேவைகளில் இருந்து அவர்கள் விலகவுள்ளனர்.
எவ்வாறாயினும், சத்திரசிகிச்சை, அவசர சிகிச்சை, குழந்தைகள் மற்றும் மகப்பேறு போன்ற விசேட சேவைகளில் இருந்து தாம் விலகப்போவதில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.