
போலியான சாட்சியங்களை உருவாக்கி தாம் கைது செய்யப்பட்டதாக தெரிவித்து வசந்த முதலிகே பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பொய்யான சாட்சியங்களை உருவாக்கி வசந்த முதலிகே உள்ளிட்டோரை பிணைக் கைதிகளாக வைத்திருந்தமை மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் தலையீடுகளுக்கு எதிராக இன்று பிற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.