
துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பிரதேசத்தில் வாழ்ந்த இலங்கையர்களில் ஒருவரது இருப்பிடத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4300ஐ தாண்டியுள்ளது.