தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையில் தெரிவித்தார்.
தேர்தல்கள் பிற்போடப்படுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று(06) பொலன்னறுவையில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலதிகத் தகவல்களை வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் ஒத்திவைக்கப்படுமா இல்லையா என்பதை என்னால் கூற முடியாது. அது குறித்து தேர்தல் ஆணையமும், அரசும் தான் முடிவு செய்யும். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று 09-10 திகதிகளில் நடைபெறவுள்ளது.
நீதிமன்ற திகதியில் அரசும், தேர்தல் ஆணையமும் ஆஜராகும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருதரப்புடனும் விவாதித்து என்ன முடிவு எடுப்பார்கள் என்று இதுவரை கூற முடியாது, அதிலிருந்து பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறேன்.