
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான விசேட அறிவிப்பை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கூடிய வர்த்தமானி அச்சிடுவதற்கு அரசாங்க அச்சகத்திற்கு இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.