இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் விடுக்கப்பட்ட அழைப்பை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை மக்களுடன் இந்தியா கொண்டிருக்கும் ஆழமானதும் நிலைபேறானதுமான நட்புறவை வலியுறுத்தும் திட்டங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் இணைந்து அங்குரார்ப்பணம் செய்தமையையிட்டு பெருமகிழ்வடைகின்றேன். என்று வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதன்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதன்போது குறிப்பாக இலங்கையின் வலுவான மீட்சியை முன்னிறுத்தி மேற்கொள்ளத்தக்க நடவடிக்கைகள் குறித்து இருநாட்டுத்தலைவர்களும் கலந்துரையாடல்களை முன்னெடுப்பர்.