அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன நேற்று (31) செய்தியாளர் மாநாட்டை நடத்தி அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றினை விடுத்திருந்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தமது சங்கத்திற்கு அனுமதி வழங்கினால், 30/= முதல் 35/= ரூபாய் வரையிலான விலையில் முட்டைகளை வழங்க முடியும் என திரு.என்.கே.ஜயவர்தன வலியுறுத்தினார்.
முட்டையின் விலை சுமார் 70 ரூபாவாக அதிகரித்துள்ளதால், பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரி பொருட்களின் விலைகளையும் பேக்கரிகள் அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் ஜயவர்தன தெரிவித்தார்.
லொறிகளில் இருந்து கொண்டு வரப்படும் முட்டையை ரூ.55/= க்கு விற்கும் நாடகம் நிறுத்தப்பட வேண்டும் என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். ஒரு பேனாவால் முட்டை இறக்குமதியை அரசாங்கம் அனுமதிக்க முடியும் என்றும் ஜயவர்தன மேலும் தெரிவித்திருந்தார்.