
முட்டையின் விலை குறையும் பட்சத்தில் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (26) முதல் முட்டை ஒன்றின் மொத்த விலை 65 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.