
அரசியல்வாதிகள் 60 வயதில் ஓய்வு பெற்று இளைய தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என சிறிவிமல தேரர் தெரிவித்துள்ளார்.
அரச பணியில் உள்ள மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அமுலாகும் சட்டம் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை நேற்று சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரதமரின் சுற்றறிக்கையின் பிரகாரம் அனைத்து அரச ஊழியர்களும் அறுபது வயதில் ஓய்வுபெற வேண்டும் என சிறிவிமல தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அறுபது வயதிற்குப் பிறகு மக்கள் உடல், மன மற்றும் உடல்நலப் பிரச்சினைகளையும், மற்ற பலவீனங்களையும் அனுபவிக்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.