எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமாயின், மின்கட்டணத்தை செலுத்த வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் ஜனவரி மாதம் மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும், வருடத்தின் நடுப்பகுதியில் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விலையேற்றங்கள் அனைத்தும் மிகவும் அநியாயம் மற்றும் அநீதியானது என்பதால், மக்களுடன் இணைந்து இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மின்கட்டணத்தினை அதிகரித் இலாபம் ஈட்டும் மின்சார சபை மீண்டும் பழைய நஷ்டத்தை ஈடுசெய்யும் நோக்கில் கட்டணத்தை குறைக்க செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.