
இந்த ஆண்டு நடைபெற்ற கொரிய மொழி சிறப்பு தேர்வில் 1,398 விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தென் கொரியாவில் வேலைக்குச் சென்று வெற்றிகரமாக நாடு திரும்பிய இலங்கையர்களுக்காக இந்தப் பரீட்சை நடத்தப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த ஆண்டுக்கான பரீட்சைக்கு 1,652 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள் நாளை முதல் நடைபெறவுள்ளதுடன், இது தொடர்பான தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள பணியகத்தின் கிளை அலுவலகத்திற்கு சென்றும், நேர்காணலில் பங்கேற்கலாம்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் 31 வரையான காலப்பகுதியில் 4,329 இலங்கையர்கள், தென் கொரியாவிற்கு வேலைக்காக சென்றுள்ளனர்.