
ஹிக்கடுவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஹிக்கடுவை திராணகம பிரதேசத்தில் இன்று (31) காலை இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படாத அதேவேளை, காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.