
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு, எதிரான விசாரணைகள் தொடர்பான அறிக்கையை நவம்பர் 10ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், உத்தரவிட்டது.
அன்றையதினத்தில் மன்றில் ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புமாறு கட்டளையிட்டது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளருக்கு பொய்யான தகவல்களை வழங்கி இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டார் என்று அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.