பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஷேக் மெக்மூத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, அமெரிக்கா ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானத்திற்கு 4வது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ‘1267 அல்கொய்தா தடை குழு’ வில் நேற்று, ஷாகீத் மெக்மூத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்தை இந்தியாவும், அமெரிக்காவும் கொண்டு வந்தது. இதற்கும் சீனா தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டுள்ளது.
முன்னதாக லஷ்கர் இ தொய்பாவன் சஜீத் மிர்,, ஜமாத் உத் தாவா அமைப்பின் அப்துல் ரெஹ்மான் மக்கி, அப்துல் ரவுப் அசார், ஜெய்ஸ் இ முகம்மது தலைவர் மசூத் ஆசாரையும், சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிக்க முடியாமல் தடுத்து சீனா பாதுகாத்து வருகிறது. அதில் சஜீத் மிர் என்பவர், மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் ஆவார் .