எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீது நாளுக்கு நாள் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
சுமார் 200 முறைப்பாடுகள் இலங்கை பொதுப் பயன்பாடுகள் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
எரிபொருளின் தரம் சரியாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் உள்ள நிரப்பு நிலையங்களில் இருந்து 20 எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனைக்காக தொழில் நுட்ப நிறுவனத்திடம் (ITI) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
60 நிரப்பு நிலையங்களில் எரிபொருள் மாதிரி சோதனை தொடங்கப்பட்டுள்ளது என்றார்.