புகையிரத திணைக்களம் கடந்த ஆண்டில் (2021) 15,188 புகையிரத பயணங்களை இரத்துச் செய்துள்ளது.
2021 ஆம் ஆண்டுக்காக புகையிரத திணைக்களம் தொடர்பாக வெளியிடப்பட்ட வருடாந்திர கணக்காய்வு அறிக்கையின்படி இது 18 சதவீதமாகும்.
கடந்த ஆண்டு 84,244 புகையிரதங்களை இயக்க அத்திணைக்களம் திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த ஆண்டில் 69,036 புகையிரதங்களை மட்டுமே இயக்க முடிந்தது என்று கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.