
நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
41,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பலுக்கே இந்த கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 7 ஆம் திகதி குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்தது.
இதேவேளை, கொள்வனவு செய்யப்பட்ட பெட்ரோல் அடங்கிய கப்பலிலிருந்து பெட்ரோலை தரையிறக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதனை தவிர எதிர்வரும் நவம்பர் மாதம் நாட்டை வந்தடையவுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கான ஆரம்ப கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தற்போது நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.