பிரித்தானியாவில் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வரிசையில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 56 வயதான தமிழ் பெண் வனேசா நந்தகுமாரன் முதலிடம் பெற்றுள்ளார்.
ராணி இரண்டாம் எலிசபெத் இறுதி புனித பயணத்தை மேற்கொள்ளும் போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் நிற்பதாக கூறப்படுகிறது.
இந்த வரிசையில் வனேசா நந்தகுமாரன் முதலிடம் பெற்றுள்ளார்.
தனது குடும்பத்தினர் பிரித்தானிய அரச குடும்பத்தின் பெரும் அபிமானிகள் என வனேசா நந்தகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் இலங்கைக்கு வழங்கிய சுதந்திரத்திற்கு நன்றி செலுத்தும் தருணம் இது என்றும் அவர் கூறினார்.