பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு, எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் தலைமையில் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடல் ஸ்கொட்லாந்தில் இருந்து இங்கிலாந்தின் லண்டனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உடல், இன்று பிற்பகல் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
மறைந்த பிரிந்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் நேற்று எடின்பரோவில் உள்ள செயின்ட் கில்ஸ் தேவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அதன்பின், உடலை லண்டனுக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த நோக்கத்திற்காக ரோயல் ஏர் ஃபோர்ஸ் விமானம் பயன்படுத்தப்பட்டது, மேலும் அவரது மகள் இளவரசி ஏன், ராணியின் உடலுடன் முழு நேரமும் பயணம் செய்தார்.
தற்போது பக்கிங்ஹாம் அரண்மனையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராணியின் உடல் இன்று பிற்பகல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.