ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு புதிய இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக் ஷவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியை நாமல் ராஜபக் ஷவிற்கு வழங்குமாறு பொதுஜனபெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகளை மறுசீரமைக்க கட்சி மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸீற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்குமாறு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கட்சியின் செயற்குழுவிடம் வலியுறுத்தியுள்ளனர்.மேற்படி கட்சிக்கு புதிய இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ளும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாமல் ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் கட்சி கூட்டங்கள் நடைபெறவுள்ளதோடு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கூட்டணியையும் ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.