நாட்டில் கடந்த எட்டு மாதங்களில் 500மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்தெரிவித்துள்ளது. அவர்களில் பெருமளவிலானோர் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காமலேயே வெளிநாடு சென்றுள்ளதாகவும் அதனால் சுகாதாரத் துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதுடன் அப்பாவி பொதுமக்கள் அதனால் பெரிதும் பாதிப்படைவார்கள் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க அது தொடர்பில் தெரிவிக்கையில்:
கடந்த எட்டு மாதங்களில் 500 டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களின் பெரும்பாலும் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கவில்லை என்பதுடன் கடந்த இரண்டு மாதங்களில் அவர்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.