
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவின் அரச குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியப் பேரரசில் அதிக காலம் மகுடத்தை வைத்திருந்த இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது 96 வயதில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று அறிவித்தது.
மறைந்த ராணி எலிசபெத்தின் உடல் நாளை லண்டனுக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.