திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ”ஹரக் கட்டா” என்றழைக்கப்படும் நதுன் சிந்தக உள்ளிட்ட 08 பேரை துபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
ஹரக் கட்டாவை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான சர்வதேச சிவப்பு பிடியாணைக்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஹரக் கட்டா எனப்படும் நதுன் சிந்தக போலியான பெயர் ஒன்றில் துபாயில் வசித்து வந்தபோது அங்கு கைது செய்யப்பட்டுள்ளார்.