மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேல் கொத்மலை, கெனியன் ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்பட்டது. இந்நீரினை வெளியேற்றுவதற்காக இன்று நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டது.
அந்தவகையில் மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டிருந்தது.
அத்தோடு கெனியன் நீர்தேகத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதோடு, அங்கு இரண்டு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும் படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.