இலங்கையில் கடந்த ஆண்டு குழந்தைகளின் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டில் 301707 பிறப்புக்கள் பதிவாகியிருந்ததுடன் 2021ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 284848 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2021 ஆம் ஆண்டில் குழந்தைகள் பிறப்பு 16859 குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, 2021 ஆம் ஆண்டில் பிறப்பு வீதம் 12.9 வீதமாக குறைவடைந்துள்ளது. பெண் பிள்ளைகளை விடவும் ஆண் பிள்ளைகள் அதிகளவில் பிறந்துள்ளதாகவும் புள்ளிவிபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், 2021ம் ஆண்டில் கொரோனா நோய் தொற்று காரணமாக இவ்வாறு குழந்தை பிறப்புக்கள் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.