மலசலகூடங்களில் பயன்படுத்தும் கடதாசி மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், விரைவில் பேரழிவு நிலை உருவாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலாத் துறைக்கு மலசலகூட கடதாசி என்பது மற்றுமொரு முக்கியமான பொருளாகும். மேலும் இந்தத் துறையை வலுப்படுத்தும் முயற்சியில் அதன் மீது கட்டுப்பாடுகளை விதிப்பது சிக்கலானது என அந்தத் துறையிலுள்ள வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுலா ஹோட்டல்கள், மருத்துவமனைகள் மற்றும் விமானங்களுக்கு மலசலகூட கடதாசி என்பது அவசியமான பொருளாகும். எனவே அதன் இருப்பைக் கட்டுப்படுத்துவது எதிர்பாராத முடிவு என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேசத்துக்காக பணம் திரட்ட அரசாங்கம் முயற்சித்தாலும், சுற்றுலாப் பயணிகள் ஒரு மலசலகூட கடதாசி கூட இல்லாத தேசத்துக்குச் செல்ல வாய்ப்பில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.