எவ்விதமான வேலைகளுமின்றி 100,000 இற்கும் அதிகமான ஊழியர்கள் அரச சேவையில் இருப்பதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.
நேற்று சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார். மூன்றில் ஒரு பகுதியினர் இல்லாவிட்டாலும் அரச சேவையை பேண முடியும்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” குறிப்பிட்ட பணி ஒதுக்கீடு இல்லாமல் அரச ஊழியர்களை பராமரிப்பதில் சிக்கல் நிலவுகிறது, உரிய முறைக்கு புறம்பாக அரச சேவைக்கான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் ஊடாக அரச சேவையில் மிகை ஏற்பட்டுள்ளது.
அரச சேவையில் 16 இலட்சம் பேர் உள்ளனர். தற்போதுள்ள அரச ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இல்லாவிட்டாலும் அரச சேவையை பேண முடியும் “, எனக் குறிப்பிட்டார்.