
நல்லூர் திருவிழாவில் கலந்து கொள்ளும் மக்கள் சுகாதார நடைமுறைகளை பேணி வருமாறு மாநகரசபை கேட்டுக் கொள்கிறோம் என யாழ் மாநகர சபை மேயர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நல்லூர் உற்சவத்தின் கடைசி உற்சவங்களான இரத உற்சவம், தீர்த்தோற்சவங்களில் காவடி, பறவைக் காவடிகளிற்கு சிறப்பான ஒழுங்கமைப்புக்கள் செய்யப்பட்டிருக்கிறது.
தூக்குக் காவடி, பறவைக் காவடிகள் பருத்தித்துறை வீதியால் மட்டும் உள் வரலாம் என அறிவிக்கப்படுகிறது.
காவடிகள் செட்டி தெரு வீதியில் இறக்கப்பட்டு பக்தர்கள் நடந்து ஆலயத்திற்கு செல்லலாம்.
இதை தொடர்ந்து டக்டர்கள் செட்டி தெரு வீதி ஊடாக செல்ல வேண்டும். இதனை பின்பற்றுமாறு கேட்டு கொள்கிறோம். ஆலயத்திற்கு பக்தர்களின் வருகை அதிகம் காரணமாக திருட்டு சம்பவங்களும் அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் மக்கள் நகைகளை அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும் இல்லையேல் உங்கள் உடைமைகளுக்கு நீங்களே பொறுப்பு ஆகும், இருந்தாலும் நல்லூர் ஆலய சூழலை மாநகர சபை சி சி டிவி மூலம் கண்காணிக்கிறது.
ஆலய பெரும் பகுதி கட்டுபாடுகள் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அதனை அகற்றுமாறு வேண்டுகோள் உள்ளது ஆனால் அதனை நீங்கள் கடைபிடித்து செயற்பட வேண்டும் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழா பக்தி பூர்வமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக வீதித் தடைகள் போடப்பட்டுள்ளன.
இவ் உற்சவத்தினை குழப்பும் வகையில் இருக்க கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் அங்க பிரதட்சணனை செய்யும் வீதியில் குப்பை குறிப்பாக கச்சான், சுண்டல் குப்பைகளை இடுவதால் அங்க பிரதட்சனை செய்யும் அடியவர்களிற்கு சுகாதார இன்னல்கள் ஏற்படும் அதனை தவிர்க்குமாறும், மாநகர சபை மேலும் அவசியமான அறிவித்தல்களை தொடர்ந்தும் அறிவிக்கும் என்றார்.