முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிலம் லான்சா, நகரபிதா தான் லான்சா ஆகியோரின் வீடுகளை கொழுத்திய மே 9 சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மே 9ம் திகதி காலிமுகத்திடல் அரகலயவுக்கு எதிராக நடாத்தப்பட்ட மிலேச்ச தாக்குதலை அடுத்து நாட்டின் பல பாகங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. இதில் ஓர் அங்கமாக நீர்கொழும்பில் முன்னால் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா எம்.பி.யின் வீடு, நகரபிதா தயான் லான்சா வீடு அவர்களின் குடும்பத்தினருடன் சம்பந்தப்பட்ட இடங்கள் ஹோட்டல்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கே நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ரொஷான் பிரனாந்து பொலிஸ் நிலையம் ஆழைத்துச் செல்லப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பொலிஸார் இவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
மாநகர சபையின் ஐ.தே.க. உறுப்பினரான இவர், தற்போது ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாலராக செயல்படுகிறார்.
நீண்ட விசாரணையின் பின்னர் ரொஷான் பிரனாந்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.