
பொகவந்தலாவ பகுதியிலிருந்து பலாங்கொடைக்கு தொழிலுக்கு சென்று திரும்பியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலுக்கு சென்று மீள திரும்பியவர்கள் மீது நேற்றிரவு யூ.பி.ஜி தோட்டப் பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பின்னவல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அவர்களில் ஐவர் பலாங்கொடை வைத்தியசாலையிலும் ஒருவர் இரத்தினபுரி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த பேருந்தை யூ.பி.ஜி தோட்டப் பகுதியில் வைத்து மறித்து சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அருகில் இருந்த வீட்டுக்குள் நுழைந்த நிலையில் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.