மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி பங்குகளும் விற்கப்படும். அத்துடன் மத்தள விமான நிலையத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் விமானப் போக்குவரத்து செயல்முறையை மறுசீரமைக்கும் போது அந்நிய செலாவணியை ஈட்டும் வகையில் விமான நிலையம் மாற்றப்பட வேண்டும்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் பாதுகாப்பு வலையமைப்பாக இரண்டாவது விமான நிலையமாக மத்தள விமான நிலையம் பயன்படுத்தப்படும்.
மத்தள விமான நிலையத்தில் மேம்படுத்தப்பட வேண்டிய மற்றும் கிடைக்க வேண்டிய வசதிகள் தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு விமான நிறுவனங்களிடம் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.