
இலங்கைக்கு ஈரான் குடியரசின் தொடர்ச்சியான உதவிகள் வழங்கப்படுமென ஈரான் தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே உறுதியளித்துள்ளார்.
வெளிநாட்டமைச்சர் அலி சப்ரியை ஈரான் தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே வெளிநாட்டமைச்சில் சந்தித்தார். இதன்போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
இரு நாடுகளுக்குமிடையிலான நீண்ட காலம் நீடித்த சுமுகமான உறவுகள் குறித்து குறிப்பிட்ட வெளிநாட்டமைச்சர், இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்காக அரசாங்கம் இதுவரை முன்னெடுத்துள்ள உறுதியான நடவடிக்கைகள் குறித்து தூதுவருக்கு விளக்கினார்.
இலங்கை — ஈரான் இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய தூதுவர் ஹஷேம் அஷ்ஜசாதே, இலங்கைக்கான ஈரான் குடியரசின் தொடர்ச்சியான உதவிகளை உறுதி செய்தார்.