நாட்டின் வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதில் அரசாங்கம் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதாக ஒன்றியத்தின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.
ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதனால் இலங்கை பெரும் வல்லரசுகளின் போர்க்களமாக மாறியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவுக்கு துறைமுகங்கள் வழங்கப்பட்ட நிலையில், அரசாங்கம் பல தீவுகளை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.
சீனாவால் நடத்தப்படும் துறைமுகங்களில் கப்பல்கள் நிறுத்தப்படும் போது, இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கிறது.
பாகிஸ்தானில் இருந்து கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததும், இந்தியா விமானங்களை அனுப்புகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய நடவடிக்கைகளால் மக்கள் மூச்சு விடக்கூட முடியாத நிலையில் உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.