சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டை வந்தடைய உள்ள கச்சா எண்ணெய் தொகையை தரையிறக்கிய பின்னர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
100,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெயுடனான சரக்கு கப்பல் நேற்றிரவு (13) நாட்டை வந்தடையத் திட்டமிடப்பட்டிருந்ததுடன், அதன் மாதிரிப் பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், 120,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயை ஏற்றிய மற்றுமொரு சரக்கு கப்பல் எதிர்வரும் 23ஆம் திகதிக்கும் 29ஆம் திகதிக்கும் இடையில் நாட்டை வந்தடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.