
அசாதாரண மின் கட்டண உயர்வால், ஒட்டுமொத்த மக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இதனை நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சாதாரண மக்கள் முதல் தொழில்முனைவோர் வரை இந்நிலை கடுமையாக பாதிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், தற்போது அசாதாரண அழுத்தத்தின் மத்தியிலுள்ள மக்களுக்கு இது மற்றொரு சுமையாகும் எனவும் தெரிவித்தார்.