இலங்கை ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் சுமார் 67 லட்சம் இலங்கையர்கள், போஷாக்கான உணவை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாக உலக உணவுத் திட்டத்தின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .
உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், அவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தேசிய பாவனையாளர் புள்ளி விவரங்களின் பிரகாரம், மே மாதம் 58 சதவீதமாகவிருந்த உணவுப் பொருட் களின் விலையேற்றம், ஜூன் மாதத்தில் 75.8 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன் ஜூலை மாதத்தில் 80 சதவீதமாக பதிவாகியுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலைமையிலிருந்து மாணவர்களை மீட்பதற்கு , உலக உணவுத் திட்டம் 10 லட்சம் மாணவர்களுக்கு உணவு வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளது.
மேலும் இதற்காக 2 ஆயிரத்து 200 மெட்ரிக் தொன் அரிசியைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் உலகம் உணவுத் திட்டம் அறிவித்துள்ளது.