
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 1024 பேர், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக படகுமூலம் வெளிநாடு செல்ல முற்பட்ட 13 பேர் தலைமன்னார் கடற்பகுதியில் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.
கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கைதானவர்களில் 3 ஆண்களும், 4 பெண்களும், 18 வயதிற்குட்பட்ட 6 பேரும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
அவர்கள் வுவனியா, திருகோணமலை, மொரவேவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.