பிரபல வர்த்தகரும், முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான தம்மிக்க பெரேரா விரைவில், அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இம்முறை பொருளாதாரத்துடன் தொடர்புடைய மற்றொரு சக்திவாய்ந்த அமைச்சு பதவிக்கு அவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் அந்நியச் செலாவணி நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான செயல்திட்டத்துடன் கூடிய வேலைத்திட்டத்தை முன்வைத்த ஒருவர் தம்மிக்க பெரேரா என்பதால் அவருக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு யோசனை முன்வைத்துள்ளது.
தம்மிக்க பெரேரா கடந்த மாதம் சில நாட்களே முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவி வகித்த போதிலும், அந்த குறுகிய காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க பணிகளை செய்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.