
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜாதகப்படி ஒக்டோபர் 13ஆம் திகதிக்கு பின்னர் அவர் ஜனாதிபதி பதவியை துறக்க நேரிடும் என ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப இன்னும் மூன்று மாதங்களுக்கு நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலையும் பொருளாதார ஸ்திரமின்மையும் நிலவும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் தான் இவை அனைத்தையும் கூறுவதாகவும், கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் இருந்து வெளியேறும் நாளை சரியாக கணித்த கணிப்பாளர் தாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.