ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டு காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் பூமிக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது தொடர்பில் பலரது அவதானம் செலுத்தப்படுகிறது.
அந்த உலகப் பொறுப்புக்களுக்காக இலங்கையும் முன்னெடுக்க வேண்டிய பல்வேறு கடமைகள் உள்ளன.
கரிம உமிழ்வைத் தவிர்ப்பது மற்றும் பசுமைக்குடில் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் போன்ற பல துறைகளை உள்ளடக்கிய வகையில் செயற்படுத்த வேண்டிய பல்வேறு திட்டங்கள் தொடர்பில் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் பெற்றுகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.