
நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வது குறித்து கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்மானமொன்றை மேற்கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்தாலும் அது குறுகிய காலத்திற்கு மாத்திரமே எனவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைவர்களுக்கு நேற்று அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதும் நாடாளுமன்ற அமர்வுகளை புதிதாக ஆரம்பிப்பது சம்பிரதாயபூர்வ விடயமென்பது குறிப்பிடத்தக்கது.