ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, தம்மை எதிர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறும் ஜனாதிபதி தெரிவுப் போட்டியில், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக இதுவரை அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தமக்கு எதிராக உள்ள உறுப்பினர்களை, தமக்கு வாக்களிக்க கூறி, கடினமாக பிரசாரம் செய்கின்றோம். அது, ஜிஆரின் பெரும்பான்மை என்பதால் கடினமானது.
“ராஜபக்சவின் ஊழல் மற்றும் கூட்டு அரசியலை தொடர்ந்து ஆதரிப்பதன் பயனற்ற தன்மையை அவர்களுக்கு விளக்க முயற்சித்தேன் என்றும் சஜித் பிரேமதாச ட்வீட் செய்துள்ளார்.
எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்கிழமை வேட்புமனுக்கள் கோரப்பட்டு அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 20ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலின் பின்னர் ஜனாதிபதி பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவு செய்யப்படுவார்.